மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் நேற்று இணைந்தனர். இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று சென்னை கிழக்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த துறைமுகம் தெற்கு பகுதிச் செயலாளர் வி.பி.எஸ்.மதன், துறைமுகம் தெற்கு பகுதி துணைச் செயலாளர் கல்லறை எம்.மதன், துறைமுகம் வடக்கு பகுதி இணைச் செயலாளர் ஆர். அனிதா, துறைமுகம் வடக்கு பகுதி பேரவை துணைச் செயலாளர் ஆர்.மோசஸ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அப்போது அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: