×

வாணியம்பாடி அருகே வீதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வீதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

வாணியம்பாடி, திருவள்ளுவர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நெடுஞ்சாலையில் 4 கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போராட்டம் குறித்து தகவலறிந்து சென்ற வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் வீதிகளில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்றினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   


Tags : Vainyambati , Public road blockade demanding removal of stagnant water in the streets near Vaniyambadi: Traffic jam for more than an hour
× RELATED வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது: நோயாளிகள் அவதி