×

சீன வீராங்கனை மாயமான விவகாரம்; மகளிர் டென்னிஸ் சங்க முடிவுக்கு ஜோகோவிச் ஆதரவு

லண்டன்: டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் சீனாவின் பெங்க் சுயாய். இவர் கடந்த நவம்பர் 2 ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் சீன அரசில் உயர் பதவி வகித்த ஸாங் கேவ்லி தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஒரு பதிவை குறிப்பிட்டு இருந்தார்.
அவர் சமூக வலைதளங்களில் இதை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சீன அரசு இந்த பதிவை நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து சீனா அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது இந்த பதிவுக்கு பின் அவரை காணவில்லை என்று தற்போது புகார் எழுந்துள்ளது. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. மேலும் அவரை யாரும் பார்க்கவோ, அவரைப் பற்றி கேள்விப்படவோ கூட இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச தளத்தில் இருந்த புகார் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ``டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், அதனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீன அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி இல்லாவிட்டால் சீனாவில் டென்னிஸ் போட்டிகள் நடத்துவதையே நிறுத்திவிடுவோம் என்றும் அறிவித்துள்ளது. இவர்களுடைய இந்த முடிவுக்கு உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Tags : Djokovic ,Women's Tennis Association , The magical affair of the Chinese athlete; Djokovic supports the decision of the Women's Tennis Association
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!