கோத்தகிரி-கொடநாடு சாலையில் அபாயகரமான மரங்களை அகற்ற கோரிக்கை

கோத்தகிரி: கோத்தகிரி-கொடநாடு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கேர்பெட்டா, புதூர், வார்விக் எஸ்டேட், கைகாட்டி, ஈளாடா ஆகிய கிராமங்கள் உள்ளன. சமீப காலமாக வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் சிறுசிறு நிலச்சரிவும், ஒரு சில இடங்களில் அபாயகரமான மரங்களின் கிளைகளும் சாலையில் விழுகின்றன.

கோத்தகிரி-கொடநாடு செல்லும் பிரதான சாலையில் அபாயகரமான மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் இயக்கி வருகின்றன. எனவே சாலையில் இருக்கும் அபாயகரமான மரங்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: