×

காமராஜ்சாகர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள காமராஜ் சாகர் அணை நிரம்பி  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் பெய்யும் தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பயன்படும் அணை, குடிநீருக்காக பயன்படும் அணைகளும் நிரம்பி வழியும். இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி தென்மேற்கு பருவமழை ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.

இதனால், சாண்டிநல்லா பகுதியில் உள்ள காமராஜ் சாகர் அணையின் முழு கொள்ளளவான 49 அடியை எட்டிய நிலையில் தினமும் மின் உற்பத்திக்காக கிளன்மார்கன் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து டனல் மூலம் சிங்கரா மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அணை முழு கொள்ளலவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பைக்காரா மற்றும் காமராஜ்சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், சிங்காரா, மாயார் மின் நிலையங்களில் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

Tags : Kamarajsagar Dam , Surplus discharge from Kamarajsagar Dam
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...