×

திருச்சிகரூர் புறவழிச்சாலையில் மருதூர் பிரிவு ரோட்டில் வழிகாட்டி போர்டு அமைக்க வேண்டும்: நடவடிக்கை எடுக்க வாகனஓட்டிகள் கோரிக்கை

குளித்தலை: திருச்சிகரூர் புறவழிச்சாலையில் மருதூர் பிரிவு ரோட்டில் வழிகாட்டி போர்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் திருச்சி புறவழிச்சாலை வழியாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, காங்கேயம், தாராபுரம், கரூர் உள்ளிட்ட மார்க்கத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் திருச்சி நோக்கி செல்கிறது அதே போல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர், திருச்சி மார்க்கத்தில் இருந்து கரூர் நோக்கி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்த இரு மார்க்கத்தில் இருந்தும் வரும் வெளியூர் வாகனங்கள் குளித்தலை நகருக்குள் சென்று அய்யர்மலை, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, தரகம்பட்டி, பஞ்சப்பட்டி போன்ற ஊர்களில செல்வதற்கும் அதே போல் மற்றொரு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் குளித்தலை சுங்க கேட் வழியாக முசிறி துறையூர் நாமக்கல் திருச்செங்கோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஓசூர் பெங்களூர் வரை செல்லும் வாகனங்கள் இந்த மருதூர் பிரிவு ரோடு பகுதியில் பிரிந்து தான் செல்ல வேண்டும்.

அதனால் வாகன ஓட்டிகள் வெளியூர் வாகன ஓட்டிகள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் வழிகாட்டி பலகை வைக்க முடிவு செய்து மருதூர் பிரிவு ரோடு இறக்கத்தில் சாலை இருபுறமும் காங்கிரீட் தூண்களுக்கு போடப்பட்டு பாதியிலேயே இருந்து வருகிறது. இது போல் குளித்தலை சுங்க கேட்டில் முசிறி பெரியார் பாலம் அருகே வழிகாட்டி அறிவிப்பு பலகையும் மணப்பாறை சாலையில் ஒரு வழிகாட்டி பலகை நெடுஞ்சாலைதுறையினர் வாகன ஓட்டிகள் வசதிக்காக வைத்துள்ளனர்.

அதே போன்று மருதூர் பிரிவு ரோடு குளித்தலை வரும் சாலையில் வழிகாட்டி பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்



Tags : Tiruchikur ,Maruthur Division , Sign board to be set up on Marudur section road on Tiruchikarur bypass: Motorists demand action
× RELATED “வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்” :ஆர்.எஸ்.பாரதி