காட்பாடியில் பொது விநியோக திட்டம்: மன்னார்குடியிலிருந்து 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

மன்னார்குடி: மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி பொது விநியோக திட்டத்திற்கு2500 டன் அரிசி 42 வேகன்களில் ஏற்றி அனுப்பி வைக் கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கரில் அறுவடை நடைபெற்று மாவட்டத்தில் 421 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 8 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் (40 கிலோ எடை) நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகள் மூலம் அரிசியாக அரைக்கப்பட்டு, இந்த அரிசி திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் பேரளம் ரயில் நிலையங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு சரக்கு ரயில் வேகன்களுக்கு மாற்றப்பட்டு பொது விநியோக திட்டத்திற்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து நேற்று 2,500 டன் அரிசி மூட்டைகள் 42 சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப் பணிகளில் நூற்றுக்கு மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் அரிசி மூட்டைகளுடன் லாரிகள் சாலையில் வரிசை கட்டி நின்றது.

Related Stories:

More