நவ. 25ம் தேதி முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  அறிக்கை:  ரயில்வே வாரியம் கீவரும் 25ம்  தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16729),  புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16730) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4  முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண்  (22609), கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (22610) இண்டர்சிட்டி  எக்ஸ்பிரஸ் ரயில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-நாகர்கோவில்  இடையே இயக்கப்படும் ரயில் எண் (16605), நாகர்கோவில்-மங்களூரு இடையே  இயக்கப்படும் ரயில் எண் (16606) எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா  பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில் எண் (12605), காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12606) பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும், எழும்பூர்-மதுரை இடையே  இயக்கப்படும் ரயில் எண் (12635), மதுரை-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12636) வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும்,  தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16191), நாகர்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16192) அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கபட்டு வரும் 25ம்  தேதி முதல் இயக்கப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரல்-கோவை இடையே  இயக்கப்படும் ரயில் எண் (12679), கோவை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில்  எண் (12680) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும்,  நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16791), பாலக்காடு-நெல்லை  இடையே இயக்கப்படும் ரயில் எண் (16792) பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4  முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில்  எண் (16649) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் 2 முன்பதிவில்லா பெட்டிகளும்,  நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16650) பரசுராம்  எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டு வரும் 25ம்  தேதி முதல் இயக்கப்படும்.

Related Stories:

More