×

பாக். பிரதமர் இம்ரான் எனது பெரிய அண்ணன்: பஞ்சாப் காங். தலைவர் சித்து புதிய சர்ச்சை

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தனது அண்ணன் போன்றவர் என்று சித்து கூறியுள்ளா்ர். பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்துக்கு செல்வதற்கான கர்தார்பூர் வழித்தடம் , 20 மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது. யாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் நேற்று முன்தினம் அமைச்சர்களுடன் சென்று இங்கு வழிபட்டர். இதைத் தொடர்ந்து, இந்த மாநில காங்கிரஸ் தலைவர் சித்து நேற்று சென்று குருத்வாராவில் வழிபட்டார். அவருக்கு பாகிஸ்தான் எல்லைக்குள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சார்பாக உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். குருத்வாராவில் வழிபட்ட பின் சித்து அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எனக்கு அண்ணன் போன்றவர்,’ என்று கூறினார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி பாஜ  செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘ இதற்கு முன்பும் இம்ரான் கானையும்,  பாகிஸ்தானையும் சித்து புகழ்ந்துள்ளார். அவர் இந்தியாவுக்கோ, பஞ்சாப்புக்கோ  தகுதியான நபர் அல்ல, பாகிஸ்தானுக்கு தான் ஏற்றவர்,’’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தனது டிவிட்டரில், ‘இம்ரான் கான் யாருக்கு வேண்டுமானாலும் அண்ணனாக இருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு அவர் ஆபத்தான நபர். டிரோன் மூலம் ஆயுதத்தையும், போதை பொருட்களையும் பஞ்சாப்புக்கு அனுப்புபவர்களுக்கு உதவுபவர். தினந்தோறும் ஜம்மு காஷ்மீருக்கு தீவிரவாதிகளை அனுப்புபவர்களுக்கு துணை நிற்பவர். பூஞ்ச் பகுதியில் நமது வீரர்களின் உயிர் தியாகத்தை அவ்வளவு சீக்கிரமாகவா மறந்து விட்டோம்,’ என சித்துவை கண்டித்துள்ளார்.

Tags : Bach ,Imran ,Punjab ,Sidhu , Bach. Prime Minister, Imran, big brother, Punjab Cong. Chairman, Sidhu
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...