தொடர் பேச்சுவார்த்தையில் முடிவு ராஜஸ்தானில் இன்று காங். அமைச்சரவை விரிவாக்கம்: பைலட், ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா மாலை நடக்கிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கும் கெலாட்டுக்கும் இடையே கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது. தனது பதவிகளில் இருந்து விலகிய  பைலட், ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். சோனியா காந்தி, ராகுலின்  சமரச முயற்சிக்குப் பிறகு அவர் சமாதானம் அடைந்து, கட்சியில் தொடர்கிறார்.

இந்நிலையில்,  பைலட்டுக்கும் அவருடைய ஆதரவு எம்எல்ஏ.க்களுக்கும் அமைச்சரவையில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக பல மாதங்களாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை, தற்போது முடிவை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

* அமைச்சரவை விரிவாக்கத்தை சிக்கலின்றி செய்வதற்காக,  அமைச்சர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளனர்.

* மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பலம் 200. இதன்படி, அதிகப்பட்சமாக முதல்வர் உட்பட 30 அமைச்சர்கள் பதவியேற்க முடியும். தற்போது, முதல்வர் கெலாட் உட்பட அமைச்சரவையின் பலம் 21 ஆக உள்ளது.

Related Stories: