வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது அவமானம் கங்கனா ஆவேசம்

மும்பை:  மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்று ள்ளனர். இந்நிலையில், பாஜ செயல்பாடுகளையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து பாராட்டி வந்த கங்கனா ரனவத், முதல்முறையாக அரசுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது சோகம், அவமானம், முற்றிலும் நியாயமற்றது. தெருவில் உள்ளவர்கள் (போராடிய விவசாயிகள்) சட்டங்களை இயற்ற தொடங்கி விட்டார்கள். பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை. இதுவும் ஒரு ஜிஹாதி தேசம்தான். இதை விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Related Stories: