×

வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போல நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதிமாறன் வலியுறுத்தல்

சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போன்று நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வலியுறுத்தினார்.   சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 500 பேருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நிவாரண உதவிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வழங்கினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  வரும் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் தான் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இந்த சட்டங்களை ரத்து செய்தது போன்று நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். அதை ரத்து செய்தால் ஒன்றிய அரசை தமிழக மக்கள் மனதார பாராட்டுவார்கள்.

  3 வேளாண் சட்டங்கள் நாட்டுக்கு தேவையில்லை. அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதை தான் நாங்கள் சொன்னோம். ஆரம்பத்தில் இருந்தே திமுக தலைவரும் அதை தான் சொன்னார். இப்போது ரத்து செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.  தேர்தல் தோல்வி, இன்னும் வர உள்ள பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி வரும் என்ற அச்சத்தால் ரத்து செய்துள்ளனர். அதேபோன்று நீட் தேர்வையும் ரத்து செய்தால் உண்மையிலேயே நாங்கள் உங்களை மனதார பாராட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : NEET ,Dayanidhimaran ,U.S. government , Agriculture Sutton, NEET EXAMINATION, GOVERNMENT, DAYANITHIMARAN
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...