×

மூடப்பட உள்ளதாக தவறான குற்றச்சாட்டு கடந்த ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் அதிகரிப்பு: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அம்மா மருந்தகங்களை  தமிழ்நாடு அரசு மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி சுமத்தியுள்ளார். எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126ல் இருந்து 131 ஆக  இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும்  ஆண்டொன்றுக்கு  60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதிதாக துவங்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   

இதன் அடிப்படையில்  நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  துவங்குவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை  ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம்  ரூ.48.21 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள்  மூலம்  ரூ.93.09 கோடிக்கு  இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது.   

மேலும், அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம்  கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்தி  கொள்முதல் செய்வதன் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன்மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும்  கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : DMK ,Tamil Nadu government , Acusación falsa, regla pasada, regla DMK, farmacias madre, gobierno de Tamil Nadu
× RELATED மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய குஷ்பு உருவபடம் எரித்து ஆர்ப்பாட்டம்