×

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 40.80 லட்சம் பயனாளிகள் பயன்: மருத்துவத்துறை அறிவிப்பு

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று முன்தினம் வரை 40 லட்சத்து 80 ஆயிரத்து 770 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.  இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இப்போது  செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது  முதல் 19ம் தேதி வரை உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 16,88,982 பேர், நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 11,52,361 பேர், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 8,43,038 பேர், நோய் ஆதரவு சிகிச்சை சேவையை 1,39,737 பேர், இயன்முறை சிகிச்சை சேவையை 2,55,850 பேர், சிறுநீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை 802 பேர் என மொத்தம் 40,80,770 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதில் முதன் முறையாக சேவைகளை பெற்ற 35,43,738 பயனாளிகளும் அடங்குவர் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Búsqueda de personas, medicamentos, beneficiarios, médicos, notificación.
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...