தமிழ்நாட்டில் விவசாயிகள் விதை உற்பத்தியாளர்கள் ஆகலாம்; விதைச்சான்றுத்துறை அறிவுறுத்தல்.!

சென்னை: தமிழ் நாட்டில் இரண்டாவது பசுமை புரட்சியை ஏற்படுத்தவும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு தட்டுபாடின்றி உணவு கிடைத்திடவும், உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் விவசாய பெருமக்கள் உள்ளனர். அதிக வேளாண் உற்பத்திக்கு அடிப்படையாக இருப்பது நல் விதைகளே ஆகும்.

மொத்த சாகுபடி பரப்பில் சுமார் 25 %  மட்டுமே அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் விவசாயிகளுக்கு சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.  

மீதமுள்ள 75 %  பரப்பளவுக்கு விவசாயிகள் தாங்களாகவே விதைகள் தயார் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.  அவ்விதைகள் நல்ல தரமானவைதானா என்பதை பெரும்பாலும் அறிவதில்லை. ஒவ்வொரு பருவத்திலும் எடுக்கப்படும் நெல் மணிகளையே தொடர்ந்து விதையாக பயன்படுத்துவதால் அவற்றின் வீரியம் குறைந்து விளைச்சல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையினை முற்றிலும் மாற்றிட விவசாயிகள் விதை உற்பத்தியாளர்கள் ஆக வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்றுத்துறை இதற்கான அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்கிட தயாராக உள்ளது என கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் திருமதி ஷீபா தெரிவித்துள்ளார்.

தரமான விதை

தரமான விதை என்பது பாரம்பரிய குணங்களிலிலிருந்து சிறிதும் குறையாமல் இருக்கவேண்டும்.  களை, பிற இரகம், மற்றும் பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், பு+ச்சி மற்றும் பு+ஞ்சாணங்களால் தாக்கப்படாமலும் தூசி, தும்பு இல்லாமலும் இருப்பது அவசியம்.  விதை விதைத்தவுடன் நல்ல முளைப்புத்திறனுடனும், சீராகவும், செழிப்பாகவும் வளர்ந்து அதிக மகசூலுக்கு அடிப்படையாக விளங்குவதே தரமான விதையாகும்.

விதை சான்றளிப்பின் நோக்கம்

விவசாயிகளிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும், விதைத்தரம் குறித்தும் உத்தரவாதம் அளிப்பதே விதைச்சான்றளிப்பு ஆகும்.  விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாடுக்கென்று சட்டபு+ர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு ஆகும்.  மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், மிகுந்த முளைப்புத்திறனும் உள்ள தரமான விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச்செய்வதே விதைச்சான்றளிப்புத்துறையின் முக்கிய நோக்கமாகும்.

தரமான சான்று விதை உற்பத்தி

சான்று விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விதைப்பண்ணை பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணை பதிவு செய்யும்போது விதைப்பண்ணைக்கு பயன்படுத்தப்பட்ட விதைக்கான ஆதாரம் குறித்த சான்றட்டை, விதை வாங்கியதற்கான பட்டியல் மற்றும் உரிய வடிவத்தில் விதைப்பு அறிக்கை, அமைவிடம் குறித்த வரைபடம் மற்றும் உரிய பதிவு கட்டணம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

வயல்தரம் மற்றும் விதை தரம்

பதிவு செய்த விதைப்பண்ணைகளை விதைச்சான்று அலுவலர் ஆய்வு செய்து வயல் தரம் குறித்து உற்பததியாளருக்கு தெரிவிக்கப்படும்.  விதை உற்பத்தியாளர்கள் விதைச்சான்று அலுவலர் அவ்வப்போது குறிப்பிடும் குறைபாடுகளை நிவிர்த்தி செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் விதைகளை ஆய்வு செய்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  

சுத்திகரிக்கப்பட்ட விதைகளிலிருந்து மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனைக்கு அனுப்பப்படும்.  விதைத்தரம் தேறிய விதைகளுக்கு விதைச்சான்று அலுவலரால் சான்றட்டை பொருத்துவதோடு, உரிமம் பெற்று பிற விவசாயிகளுக்கு விற்பனை செய்து லாபம் அடையவும் வாய்ப்பு உள்ளது. இவ்விபரத்தினை கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கிறார்.

Related Stories:

More