×

நெமிலி பேரூராட்சியில் பாழடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ள கிளை நூலக கட்டிடம்-புதிய கட்டிடம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை

நெமிலி :  நெமிலி பேரூராட்சியில் பாழடைந்து சிமென்ட் பூச்சிகள் உதிர்ந்துள்ள கிளை நூலக கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   
நெமிலி பேரூராட்சி சாய்ராம் நகரில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த  நூலகம் 1965ம் ஆண்டு கட்டப்பட்டு பழமை வாய்ந்ததாக உள்ளது. அதில் 1992ம் ஆண்டு புதிய நூலகம் கட்டிடம்  கட்டப்பட்டு சாய்ராம் நகரில் செயல்பட்டு வருகிறது.  இதில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட வாசகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என நூலகத்திற்கு வந்து பயனடைகின்றனர்.

மேலும், இந்த நூலகம் கட்டி 30 ஆண்டுகள் ஆகியதால், கட்டிடம் பழுதடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நூலக கட்டிடத்தில் மழை நீர் இறங்கி புத்தகங்கள் முழுவதும் நனைந்து  வீணாகி வருகிறது.
மேலும், கட்டிடத்தின் மேல் தளங்கள் பிளவுபட்டு   கட்டிடத்தின் மேல் தளம் கீழே விழும் நிலையில் உள்ளதால், நூலகத்திற்கு வரும் வாசகர்கள் உயிர் பயத்துடன்  நூலகத்திற்கு வந்து நூல்களை படித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல்  நெமிலி தாலுகாவாக தளர்த்தப்பட்டு நிலையிலும், நூலகம் தரம் உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. தற்போது செயல்பட்டு வரும் நெமிலி கிளை நூலகத்தை தர வேண்டும் மற்றும் பாழடைந்த நிலையில் உள்ள நூலகம் கட்டிடத்தை புதிய கட்டிடம் அமைத்து  தரம் உயர்த்தி தர  வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நூலக அதிகாரிகளிடமும், எம்எல்ஏ எம்பி ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி வாசகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  
 எனவே மாவட்ட நிர்வாகத்தினர் பாழந்துள்ள பழைய நூலக கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nemli Municipality , Nemili: Readers have demanded the removal of the dilapidated branch library building in Nemli Municipality and the construction of a new building.
× RELATED நெமிலி பேரூராட்சியில் 2020ம் ஆண்டில் ₹50...