ஜாம்புவானோடை காலனி தெருவில் ஆபத்தான நிலையில் நீர்த்தேக்க தொட்டி

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை காலனி தெரு பகுதியில் உள்ள பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்த குடிநீர் தொட்டி மூலம் ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் தொட்டி பழுதாகியதால் இதை பயன்படுத்துவது நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஆனால் தொட்டியை இடித்து அகற்றவில்லை.

இதனால் குடிநீர் தொட்டியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதேபோல் எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்த்து வருவதுடன் அப்பகுதியில் நடமாடவும் தயங்கி வருகின்றனர்.எனவே தற்போதைய திமுக அரசும், ஊராட்சி நிர்வாகமும் முன்வந்து இந்த பழமையான குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: