×

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற அறிவிப்பிற்கு பிரதமரை புகழும் தலைவர்கள் 15 மாதங்கள் அமைதியாக இருந்தது ஏன்? : ப. சிதம்பரம்!!

டெல்லி : ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி கூறியது ஏன் என்று ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு அவரது அரசியல் திறனை காட்டுவதாக உள்துறை அமைச்சரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதே போல விவசாயிகள் மீது பிரதமர் அக்கறை கொண்டுள்ளார் என பாஜக தலைவர் நட்டா கூறியதையும் குறிப்பிட்டுள்ள ப. சிதம்பரம், கடந்த 15 மாதங்களில் இந்த தலைவர்கள் தங்களது ஆலோசனைகளை ஏன் பிரதமருக்கு கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் பிரதமர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ள ப. சிதம்பரம், அமைச்சரவையின் முன் அனுமதி இன்றி சட்டங்கள் இயற்றப்படுவது பாஜக ஆட்சியில் மட்டுமே நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : P. Chidambaram , ப. சிதம்பரம்
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...