×

கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் திருவிழா

மேலூர் : மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள்மலை. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அப்போது கோவிலை ஒட்டி உள்ள சேங்கை எனப்படும் ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அருகில் போட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். இத்துடன் மிளகு, உப்பு ஆகியவையும் அந்த மண்ணில் போடப்படும். இப்படி மண்ணை எடுத்து போட்டால் விவசாயம் செழிப்பதுடன், நோய் நொடியின்றி வாழலாம் என்பது மக்கள் நம்பிக்கை. பக்தர்களால் கைப்பிடி மண்ணாக வீசப்பட்ட இந்த இடத்தில் தற்போது ஒரு மணல் குன்றே உருவாகி உள்ளது.

நேற்று நடந்த விழாவில் பக்தர்கள் வழக்கம்போல் மண்ணை எடுத்து வந்து போட்டனர். இரவில் இங்குள்ள பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. இதே போல் மேலவளவு சோமகிரி மலை அடிவாரத்தில் உள்ள கருப்பு கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தினர்.

Tags : Soil Mountaineering Festival ,Karthika , Melur: Perumalmalai is located at Narasingampatti near Melur. The annual Karthika Deepa Thirunal is held at the Munnamalai Andichamy Temple here
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி