×

அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மீண்டும், மீண்டும் மண்சரிவு

* சீரமைப்புப்பணிகளில் பின்னடைவு

கொடைக்கானல் :கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக, கடந்த பல நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த சாலை மூடப்பட்டது. சாலையை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் சாலையின் நடுவே உருண்டு விழுந்தது. இந்த பாறைகளை வெடி வைத்து அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக, இரவு கொடைக்கானல் அடுக்கம் - பெரியகுளம் சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சீரமைப்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறையினருக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் நேற்று காலை லேசான வெயில் அடித்தது. மதியத்திற்கு பின் மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக நேற்றுமாலை கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் டைகர் சோலை அருகே மரம் முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Layer - ,Periyakulam hill road , Kodaikanal,Heavy Rain, Land slide,Adukkam, peiyakulam
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர்...