×

இந்தியாவில் 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா?: அடுத்த வாரம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 3 டோஸ் செலுத்துவது குறித்து அடுத்த வாரம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 75 கோடி பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும், 38 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளதா, அப்படி செலுத்த வேண்டுமென்றால் யாருக்கெல்லாம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்க தடுப்பூசிக்கான தேசிய தொழிநுட்பக்குழுவின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. தற்போதய கொரோனா நிலவரம், தடுப்பூசிகள் உற்பத்தி, கையிருப்பு, தடுப்பூசியின் செயல்திறன் கால அளவு, பல்வேறு தரப்பின் பரிந்துரைகள் மற்றும் வெளிநாடுகளின் அனுபவங்கள் என்று அணைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு 3வது தவணை தடுப்பூசி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை 3வது டோஸாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த அந்நாட்டு அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

Tags : India , Will the corona vaccine 3 dose corona vaccine in India ?: The key decision will be made next week
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!