×

மருத்துவமனையில் ஜோபிடன்.. அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்ற கமலா ஹாரீஸ்!!

வாஷிங்டன் : அமெரிக்க அரசியல் வரலாற்றின் முதன்முறையாக அதிபரின் அதிகாரம் குறுகிய நேரம் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மாற்றப்பட்டது. சுமார் 1.25 மணி நேரம் கமலா ஹாரீஸ் அதிபராக செயல்பட்டார்.அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் பதவியில் உள்ளார். அமெரிக்கா வரலாற்றிலேயே அதிக வயதில் அதிபராக பதவி வகிக்கும் அதிபர் ஜோ பிடன் ஆவார். அவருக்கு வயது 79 ஆகும்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உடல் பரிசோதனை செய்து கொள்ள வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நேரத்தில் அவரது பணிகளை துணை அதிபர் கமலா ஹாரீஸ் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவர் ஒரு மணி நேரம் 25 நிமிடங்களுக்கு அப்பதவியில் இருந்தார். எனினும் அவர் அதிபருக்கான இருக்கையில் அமரவில்லை.

மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பிடன், தமது அதிகாரத்தை பெற்று பணிகளை தொடர்ந்தார். இதற்கு முன்பு இதே போன்று ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் மருத்துவ பரிசோதனை நேரத்தில் அமெரிக்காவின் துணை அதிபருக்கு வழங்கப்பட்டது. ஆனால் பெண் துணை அதிபர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.


Tags : Hospital Jobiden ,Kamala Haares ,United States , கமலா ஹாரிஸு
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்