கேரள மாநிலத்தில் 7 இடங்களில் நிலச்சரிவு: பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை..!

பத்தனம்திட்டா: தொடர் கனமழையால் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

மேலும்,  கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 15ம் தேதி அன்று சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், 18ம் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது என கேரள அரசு முடிவு செய்தது. இதனையடுத்து,  தற்காலிக அவசர முன் பதிவு தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த மாநிலங்களிலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More