மாணவிக்கு பாலியல் தொல்லை அரசு கல்லூரி பேராசிரியர் கைது

கோவை: . கோவை அரசுக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவர் அமைப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி கலெக்டரிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.இதில், அரசு கலைக்கல்லூரி துறைத்தலைவரும், பேராசிரியர் ரகுநாதன் இரட்டை அர்த்தம் கலந்த முறையில் பேசுவதாகவும், பாலியல் தொந்தரவு அளித்தாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து கல்லூரியின் இன்டர்னல் புகார் கமிட்டி கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி மேற்பார்வையில் விசாரணை நடத்தியது.

இதில், பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இவர் மீது தொடர் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ரகுநாதனை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More