ராஜாவை விவசாயிகள் மண்டியிட வைத்துள்ளனர்: நடிகர் பிரகாஷ்ராஜ் பாராட்டு

சென்னை: மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த முடிவை விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான  பிரகாஷ்ராஜ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘விவசாய சட்டங்களுக்கு  எதிராகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்து  வந்திருக்கிறேன். இடைவிடாது போராடிய என் நாட்டு விவசாயிகள், இந்த நாட்டின்  ராஜாவை மண்டியிட வைத்துள்ளனர்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: