திராவிட லெனின் டி.எம்.நாயருக்கு சிலை: வைகோ வேண்டுகோள்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி 1916 நவம்பர் 20ல் உருவாகி, 2021 நவம்பர் 20ம் நாள் 106வது ஆண்டு தொடங்குகிறது. அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் வகுப்புரிமையை நிலைநாட்ட காலத்தின் தேவையாக மலர்ந்த நீதிக்கட்சியை வழிநடத்திய முப்பெரும் தலைவர்களான நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் போன்றோரும், 1938ல் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தந்தை பெரியார், பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்த பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அருந்தொண்டுதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு கடந்தும் அசைக்க முடியாத அடித்தளத்துடன் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஆகும். நீதிக்கட்சியின் மற்றொரு தலைவரான டாக்டர் டி.எம்.நாயர் என்ற தாராவாட் மாதவன் நாயர்க்கு சென்னையில் அவரது நினைவைப் போற்றும் வகையில்  தமிழக அரசு சார்பில் முழு உருவச் சிலையை நிறுவ வேண்டும்.

Related Stories: