தொடர் மழையின் காரணமாக 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மழையின் காரணமாக 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பித்ரகுண்டா- சென்னை சென்டரல்  இடையே நேற்று அதிகாலை 4.45 மணிக்கு இயக்கப்பட்ட ரயில் (17237), சென்னை  சென்ட்ரல்- பித்ரகுண்டா இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்பட்ட (17238)  எக்ஸ்பிரஸ் ரயில்களும், அதைப்போன்று விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்படும்  பினாங்கினி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் (12711), சென்னை சென்ட்ரல்- விஜயவாடா  இடையே  பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்படும் பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12712)  ரயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More