நிதிதொழில்நுட்ப நிறுவன முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் தலைமையில் ஆளுமை குழு

சென்னை: தமிழகத்திற்கு நிதிதொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை தலைவராக கொண்டு ஆளுமை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில், தலைமை செயலாளர் இறையன்பு துணைத்தலைவராகவும், தொழில்துறை, நிதித்துறை, தகவல்தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் மற்றும் நிதிதொழில்நுட்ப துறையிலிருந்தும் உறுப்பினர்களாக இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 9 பேரை உறுப்பினர்களாக கொண்டு இக்குழு செயல்படும். 6 மாதத்திற்கு ஒருமுறை கூடி நிதி தொழில்நுட்ப முதலீடுகள் குறித்து  குழு ஆலோசனை மேற்கொள்ளும்.

Related Stories:

More