இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 110 நாடுகள் அங்கீகாரம்; ஒன்றிய சுகாதார துறை தகவல்.!

புதுடெல்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 110 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இன்றுவரை நாடு முழுவதும் 115 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 76.19 கோடி பேருக்கு முதல் டோஸும், 39.08 கோடி பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டுள்ளது. மேற்கண்ட தடுப்பூசிகளை உள்நாட்டு தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுகிறுது.

அந்த நாடுகளின் மருத்துவ குழுக்கள் அனுமதி அளித்த பின்னர், இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் உலகம் முழுவதும் 110 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு 110 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உலகளவில் பல நாடுகள் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மேற்கண்ட இரு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்டினால், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எளிதில் சென்று வர முடியும்’ என்றனர்.

Related Stories:

More