×

பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு: மூணாறில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜெயராம். தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ளார். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தற்போது ஏராளமான வெப்தொடர்களில் நடித்து வருகிறார். கொரோனா காலத்தில் இவர் நடிப்பில் வெளியான புத்தம்புது காலை, பாவ கதைகள் ஆகிய வெப்தொடர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் அவர் நடித்த ஒரு பக்க கதை என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராம் ஒரு புதிய வெப்தொடரில் நடித்து வருகிறார். இதற்காக மூணாறு சென்றார். அங்கு ஒரு சொகுசு விடுதியில் படக்குழுவினருடன் தங்கி இருந்தார்.

இதற்கிடையே அறை வாடகை, ஓட்டல் கட்டணம் என்று சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. இந்த பணத்தை கொடுக்காமல் படக்குழுவினர் அறையை காலி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அவர்களை வெளியே விடாமல் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பில் கட்டணத்தை செலுத்துவதாக கூறி முழு தொகையையும் செலுத்தினர். அதன் பின்னரே ஊழியர்கள் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Moonary Broadcast , Famous actor's son imprisoned in hotel: Three in a row
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...