×

8வது ஐஎஸ்எல் கால்பந்து இன்று தொடக்கம்; கோவாவில் முதல் போட்டியில் கொல்கத்தா-கேரளா மோதல்

கோவா: 8வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டுபோல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இன்றி போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் (கொல்கத்தா), 2 முறை சாம்பியனான சென்னையின் எப்சி, பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் பங்கேற்கின்றன. மார்ச் மாதம் வரை தொடர் நடக்கிறது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். முதல் நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சென்னையின் எப்சி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வரும் 23ம் தேதி ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

இதுவரை நேருக்கு நேர்..

ஐஎஸ்எல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 14முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 5ல் கொல்கத்தா, 4ல் கேரளா வென்றுள்ளன. 5 போட்டி சமனில் முடிந்துள்ளது. கடந்த சீசனில் மோதிய 2 போட்டியிலும் கேரளாவே வென்றுள்ளது.

Tags : 8th ,ISL ,Kolkata ,Kerala ,Goa , 8th ISL football starts today; Kolkata-Kerala clash in the first match in Goa
× RELATED சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு: 8-வது...