வேலூர் அருகே வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது: சரத்குமார்

சென்னை: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கன மழையால் வீடு இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பருவமழை தீவிரதன்மையை உணர்ந்து, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி, சுயபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மனமுருக கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories: