கொடைக்கானலில் கடைக்குள் புகுந்த காட்டுமாடுகள்

கொடைக்கானல் : கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டுமாடுகள் அவ்வப்போது நுழைந்து பொதுமக்கள்,  சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று  முன்தினம் இரவு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியிலுள்ள சூப்பர்  மார்க்கெட்டுக்குள் திடீரென 2 காட்டுமாடுகள் நுழைந்தது. இதை கண்டு கடையில்  இருந்த ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். கடைக்குள் சில  நிமிடங்கள் உலாவிய காட்டுமாடுகள் பின்னர் வெளியேறி சென்றன. எனவே  கொடைக்கானல் நகருக்குள் காட்டுமாடுகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர்  நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: