×

பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்காகவே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுகிறது பிரதமர் மோடி அரசு : எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!!

டெல்லி : டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள் என வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்

வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன், வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த ஒன்றிய அரசு, தற்போது 5 மாநில தேர்தல் வரும் நிலையில் அவசர அவசரமாக இந்த சட்டத்தை திரும்ப பெறும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்; தேர்தலுக்கு பிறகு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார்கள்,என கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், தேர்தல் அச்சம் காரணமாக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் வாபஸ் பெற்றுள்ளார்.ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது. எனினும் விவசாயிகளுக்கும் காங்கிரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது, என்றார்.


Tags : Punjab ,U.P. ,PM ,Modi , வேளாண்
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...