×

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை - புதுச்சேரி இடையே முழுமையாக கரையை கடந்தது

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. அதிகாலை 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோட்டில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியில் 19 செ.மீ, கடலூரில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. வட தமிழகத்தின் மேல் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க கூடும் தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Bank Sea ,Chennai ,Vavachcheri , Depression zone
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...