மக்கள் குறை தீர்க்கும் முகாமில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கவேண்டும்: எம்எல்ஏவிடம் மனு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் வருவாய்த்துறை சார்பில், மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு  துணை வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இம்முகாமில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர்.  

அப்போது, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கேட்டு 50க்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர். முகாமில், பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேருந்து நிலையம் அருகில்  இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஏதுவாக அதிமுக பிரமுகர் பேரூராட்சி அனுமதி மீறி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், டாஸ்மாக் மது கடை திறப்பை தடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories: