பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 9 இருளர்களுக்கு ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டிய வீடுகள் திறப்பு விழா: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர், கன்னியம்மா நகர், இருளர் காலனி மற்றும் கசவநல்லாத்தூர் இருளர் காலனி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 9 இருளர் இன மக்களுக்காக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய பசுமை வீடுகள் கட்டப்பட்டன.   இந்த பசுமை வீடுகள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி புதிய பசுமை வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.ராம்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், துணைத் தலைவர் டி.ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் வேலு, சித்ரா குமார், சிவகாமி ஞானம், நிர்மல்குமார், வசந்தா சம்பத்,  வசந்தி சுரேஷ், வேல்முருகன், கிரிஜா உதயா, சசிகலா நல்லதம்பி, பாஸ்கரன், ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், தா.குமார், வேதாச்சலம், சுப்பிரமணி, பி.காமராஜ், ஆர்.கோபால், ரவி, சங்கர், ஆர்.ராஜேந்திரகுமார், எஸ்.ஜெகஜீவன்ராம், காஞ்சிப்பாடி பி.சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: