×

கும்மிடிப்பூண்டியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: எஸ்பி அலுவகத்தில் புகார்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1 கோடி மோசடி செய்து தலைமறைவான பெண் குறித்து  திருவள்ளூர் எஸ்.பி.அலுவகத்தில் பணம் கட்டியவர்கள் புகார் அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம்,  புது கும்மிடிப்பூண்டி, மபொசி நகர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களை  உறுப்பினர்களாக சேர்த்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் ரூ.3 லட்சம் சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து ஏலச்சீட்டு கட்டியவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால்  வீட்டை விற்று ஏலச்சீட்டில் உள்ள அனைவருக்கும் பணத்தை கொடுத்துவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சீட்டு போட்டவர்கள் மாரியம்மாளை சந்திக்க சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏலச்சீட்டுக்காக பணம் கட்டியவர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர். இந்நிலையில் ஏலச்சீட்டு நடத்தி வந்த மாரியம்மாள் ரூ.1 கோடி வரை  மோசடி செய்து தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Tags : Gummidipoondi , Gummidipoondi, lottery, fraud, sp, complaint
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...