காஞ்சிபுரம் டான் சில்க் தலைவர், துணைத் தலைவர் பதவி நீக்கம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் இணையம் சார்பில் பட்டு வளர்ச்சித் துறை இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் இணைய நிர்வாக்குழு பெருந்தலைவர் மற்றும் துணை பெருந்தலைவர் மீது நம்பிக்கை இல்லாமை குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பட்டு வளர்ச்சித்துறை பதிவாளரால் நியமிக்கப்பட்ட மண்டல இணை இயக்குநர் தலைமையில் சேலம் டான் சில்க் கிளை, அலுவலகம் அமைந்துள்ள பட்டு வளர்ச்சித்துறை, உதவி இயக்குநர் அலுவலக அணைமேடு வளாகத்தில், சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் இணைய பெருந்தலைவர் ஆர்.டி.சேகர். துணை பெருந்தலைவர் கே.செந்தில்ராஜ்குமார் ஆகியோர் மீதான நம்பிக்கை இல்லாமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட 16 நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனவே, டான்சில்க் தலைவர் ஆர்.டி.சேகர், துணைத் தலைவர் கே.செந்தில் ராஜ்குமார் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: