×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இடைக்கால ஜாமின் கேட்டு பேரறிவாளன் மனு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தமக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமது விடுதலை மீதான முட்டுக்கட்டை, முழுக்க முழுக்க அரசியல்தான் என்றும், நீதியை எதிர்பார்க்கும் மனுதாரருக்கு அது நீதிபதிகளின் தயவால் மட்டுமே கிடைக்கும் என்றும் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார்.
நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்த பரிந்துரையை அவர் மீண்டும் குடியரசு தலைவருக்கே பரிந்துரை செய்தார். 7 பேர் விடுதலை விசயத்தில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.
இதனிடையே 7 பேரின் வேதனை மற்றும் நீண்டகால தண்டனையை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலையாக்க வேண்டும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த சூழலில் பேரறிவாளன் இடைக்கால ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்….

The post ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இடைக்கால ஜாமின் கேட்டு பேரறிவாளன் மனு appeared first on Dinakaran.

Tags : Perariwalan ,Rajiv Gandhi ,Delhi ,Rajiv ,Gandhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...