×

டபிள்டிஏ பைனல்ஸ் டென்னிஸ் முதல்முறையாக முகுருசா சாம்பியன்

குவாதலஜாரா:  டபிள்யூடி பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற சாதனையை கார்பினி முகுருசா படைத்துள்ளார். உலக தர வரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற  டபிள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டி  மெக்சிகோவின்   குவாதலஜாரா நகரில் நேற்று முடிந்தது. இறுதி ஆட்டத்தில்   ஸ்பெயின் வீராங்கனை  கார்பினி முகுருசா(6வது ரேங்க்),  எஸ்டோனியா வீராங்கனை  அனெட் கோன்டவெயிட்(8வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அனெட் கடந்த 2, 3 தொடர்களாக முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி  டபிள்யூடிஏ  பைனல்சில் விளையாட தகுதிப் பெற்றார்.

இந்த தொடரிலும் கடைசி இடத்தில் இருந்த அனெட் முன்வரிசை வீராங்கனைகளை வீட்டுக்கு அனுப்பி இறுதி ஆட்டத்துக்கு வந்தார்.அதனால்  அவர் மீது இருந்த   எதிர்பார்ப்பை  முன்னாள் விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையுமான முகுருசா  தவிடு பொடியாக்கினார். அவர்  ஒரு மணி 38 நிமிடங்களில் 6-3, 7-5 என நேர் செட்களில் வென்றார். அதன் மூலம்  டபிள்யூடிஏ சாம்பியன் பட்டம்  வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற புதிய சாதனைையை படைத்தார். இரட்டையர் பிரிவில்  செக் குடியரசு வீராங்கனைகள் பார்போரா கிரெஜ்சிகோவா, கேதரினா சினியகோவா இணை 6-3, 6-4 என நேர் செட்களில் சூ வெய் சை(சீன தைபே), எலிஸ் மெர்டன்ஸ்(பெல்ஜியம்) இணையை வீழத்தி சாம்பியன் பட்டம் வென்றது.


Tags : Muguruza ,WTA Finals tennis , WTA Finals, Tennis, Muguruza Champion
× RELATED டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போராடி வென்றார் இகா