×

ஹைதர்போரா என்கவுன்டர் கலெக்டர் விசாரணைக்கு காஷ்மீர் ஆளுநர் உத்தரவு: மெகபூபாவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் ஹைதர்போராவில் நேற்று முன் தினம் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள், அவர்கள் தங்குவதற்கு உதவிய வீட்டின் உரிமையாளர்கள் உள்பட 3 பேர் என மொத்தம் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேரை சுட்டு கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொல்லப்பட்டவர்களின் உடல்களை குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில் புதைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், கொல்லப்பட்ட 3 பேரும் அப்பாவிகள், தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லாதவர்கள் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.  

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா தனது டிவிட்டரில், `ஹைதர்போரா துப்பாக்கிச்சூடு குறித்து கூடுதல் மாவட்ட கலெக்டர் பதவியில் உள்ள கலெக்டரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்  உடல்களை ஒப்படைக்கக் கோரி, நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர். வீட்டுக் காவலில் மெகபூபா: `மெகபூபா முப்தி நேற்று முன்தினம் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில், நேற்று முதல் அவர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உமர் அப்துல்லா போராட்டம்
பாதுகாப்பு படையின் தாக்குதலில் 3 மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், அவர்களின் சடலங்களை ஒப்படைக்க வலியுறுத்தியும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ஸ்ரீநகரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். `கலெக்டர் விசாரணைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி ஏதாவது செய்வதாக இருந்தால், இந்நேரம் இங்கு அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டிருக்க மாட்டேன். கொல்லப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை,’’ என்றார்.



Tags : Governor of ,Kashmir ,Hyderbora ,Mehbooba , Hyderbora, Encounter, Collector, Inquiry, Megapobau
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...