×

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கோவி.மணிசேகரன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான கோவி.மணிசேகரன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. கோவி. மணிசேகரன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ் எழுத்துலகில் பொன்விழா கண்டவரும், திரைப்பட இயக்குநருமான கோவி. மணிசேகரன் தனது 96வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 புதினங்கள் படைப்பதில் ஆர்வமும், ஆற்றலும் நிறைந்த அவர் மறைந்த இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரிடம் 21 ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை பதித்த அவர் திரைப்பட  இயக்குநராகவும் புகழ் பெற்றவர். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், நாடகங்கள், சிறுகதை தொகுப்புகள், சமூக, வரலாற்று புதினங்கள் எழுதி 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் எழுத்துலகிற்கு பெருமை சேர்த்தவர். அவர் எழுதிய குற்றால குறவஞ்சி’ என்ற வரலாற்று புதினம், இயக்கிய ‘தென்னங்கீற்று’ திரைப்படம் இன்றும் அவர் பெயர் சொல்லுகின்றன. தமிழ் எழுத்துலகம் ஒரு மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் எழுத்துலகத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Govi Manisekaran ,Chief Minister ,MK Stalin , Sahitya Akademi Award winning writer Govi Manisekaran passes away: Chief Minister MK Stalin's condolences
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...