×

25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி சென்னை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்  மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் மாவட்ட வருவாய் அலுவலர் கமலா திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் முகம்மது அஸ்லாம் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருநெல்வேலி சென்னை-கன்னியாகுமரி தொழில்தடம்  (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) வருவாய் அலுவலராகவும், சென்னை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கோவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய்-3 சாந்தி மதுரை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சர்க்கரை கழக மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா இந்து சமய அறநிலையங்கள் துறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட வருவாய் அலுவலர் ராசேந்திரன் தமிழ்நாடு சர்க்கரை கழக மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை சிறப்பு திட்ட அமலாக்கத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் எல்காட் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் என 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

Tags : Relocation of 25 District Revenue Officers
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...