பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 12,034 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

சென்னை: ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையிலிருந்து 4 ஆயிரம் கன அடிநீர் நகரி ஆறு வழியாக திறக்கப்பட்டுள்ளதால்,  பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி உபரிநீர் வினாடிக்கு 12034 கன அடி கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பூண்டி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மபள்ளி அணையிலிருந்து 4 ஆயிரம் கன அடி நீர், நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி, கிருஷ்ணாநீர் வரத்து, மழைநீர் போன்றவைகளால் வினாடிக்கு 7768 கன அடி நீர்வரத்து உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை நிலவரப்படி 32.45 (35) அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது 2365 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டும் அணையின் பாதுகாப்பு கருதியும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் நேற்று மாலை 5 மணி முதல் உபரிநீர் வினாடிக்கு 12034 கன அடி  கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்று வழித்தடங்களில் கரையின் இருபுறமும் உள்ள தாழ்வான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி: புழல் ஏரியின் மொத்த அடியான 21.20ல் 18.28 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2663 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2167 கன அடி. ஏரியிலிருந்து உபரிநீர் வினாடிக்கு 2699 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.63 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2761 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 2455 கன அடி. உபரிநீர் வினாடிக்கு 3151 கன அடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரி: சோழவரம் ஏரியின் மொத்த அடி 18.86. தற்போது, 16.55 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 776 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 576 கன அடி. ஏரியிலிருந்து உபரிநீர் வினாடிக்கு 715 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரி : வீராணம் ஏரியின் மொத்த உயரம் 8.50 அடி. தற்போது 6.30 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 1465 மில்லியன் கன அடி. ஏரியில் 935 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 295 கன அடி. ஏரியிலிருந்து உபரிநீர் வினாடிக்கு 295 கன அடி வெளியேற்றப்படுகிறது.

கண்ணன் கோட்டை: கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 36.61 அடியில் 36.61 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடி. தற்போது 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 188 கன அடி. உபரிநீர் வினாடிக்கு 188 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Related Stories: