×

நாட்டின் பன்முகத்தன்மையை அழிப்பதா? வைகோ கண்டனம்

சென்னை: ஒரே நாடு, ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை என்கிற பிரதமரின் கருத்து நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சிம்லாவில் நடந்த சட்டப்பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘வளங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை’ என்று கூறியிருக்கிறார். இது ஆர்எஸ்எஸ், பாஜவின் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் கோட்பாட்டின் நீட்சிதான். இந்த போக்கு நாட்டின் பன்முகத்தன்மை தகர்க்கப்பதாகும். இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்களின் உரிமைகளை பேணவும் பாஜ அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Tags : Vaigo , Destroying the country’s diversity? Vaigo condemned
× RELATED விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ....