சென்னையில் நாளை அச்சுறுத்தும் அளவிற்கு மழை இருக்காது; தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: சென்னையில் நாளை திடீர் காற்றுடன் கூடிய மழை தொடரும், ஆனால் அச்சுறுத்தும் அளவிற்கு மழை பெய்யாது என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். வடசென்னை மற்றும் திருப்பதிக்கு இடைப்பட்ட பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அரசு நீர் திறப்பு அறிவிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு வரவேண்டிய மழை அனைத்தும் பாண்டிச்சேரி- விழுப்புரம்-திருவண்ணாமலை பகுதிகளில் கொட்டி தீர்த்தது.

சென்னை -திருப்பதி வரை உள்ள பகுதிகள் நல்ல மழை பெய்தது. வடமாவட்டங்ளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கடலோர மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தில் இருந்து காற்றின் ஊடுருவல்தான் மேற்குப் பகுதியில் இருந்து பெங்களூரை வந்தடைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வார காற்றழுத்த தாழ்வு நிலை போலல்லாமல், இது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

Related Stories: