தமிழ்நாட்டில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட தமிழகம் வருகிறது ராஜீவ் சர்மா தலைமையிலான ஒன்றிய குழு..!

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட ஒன்றிய குழு தமிழகம் வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது சென்னை அருகே வட தமிழகம் - தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழை காரணமாக 25 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், நாகப்பட்டிணம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, வேலுா், கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குடிசைகள் மட்டுமல்லாமல் பெரிய கட்டுமான வீடுகள் கூட இடிந்துள்ளன. மழைச் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் நேரில் பாா்வையிட்டு முதல்வரிடம் அறிக்கை அளித்துள்ளது. இதையொட்டி, முதல்வா் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் வழங்கபட்டுள்ளது.

இதனையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான வேளாண், நிதி, ஜல்சக்தி, எரிசக்தி, சாலைபோக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த குழு, ஆய்வு செய்ய தமிழ்நாடு வருகிறது. மழை பாதிப்புகளை பார்வையிட்டு கணக்கீடு செய்து ஒன்றிய உள்துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More