×

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் சார்பில் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது உயர்கல்வித்துறையும் மனுதாக்கல் செய்துள்ளது. சட்ட விதிகளை மீறி 10% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக மனுவில் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Supreme Court of Tamil Higher Education ,Vannians , The Tamil Nadu Higher Education Department has filed a separate appeal in the Supreme Court against the cancellation of the 10.5% internal reservation for Vanni.
× RELATED வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை...