பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே சரிவை சந்தித்த பேடிஎம்!: முதலீட்டாளர்கள் அதிருப்தி

மும்பை: பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே பேடிஎம் பங்கு சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பேடிஎம் ஐ.பி.ஓ. அண்மையில் முடிவடைந்ததை அடுத்து பங்குசந்தையில் இன்று பட்டியலிடப்பட்டது. இந்திய கார்ப்ரேட் வரலாற்றிலேயே பேடிஎம் ஐ.பி.ஓ. மிகப்பெரியது என்பதால் முதலீட்டாளர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஐ.பி.ஓ. விலையை காட்டிலும் 9 சதவீத குறைந்த விலைக்கு பங்குசந்தையில் பேடிஎம் பங்குகள் பட்டியலாகின.

பங்கு வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே  பேடிஎம் பங்கு 20 விழுக்காடுக்கு மேல் சரிந்து காணப்பட்டது. பேடிஎம் பங்கின் ஐ.பி.ஓ. விலை 2150 ரூபாய். ஆனால் இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் பேடிஎம் பங்கு விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்து 1645 ரூபாயாக குறைந்தது. இந்த சரிவால் பேடிஎம்  ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: